செந்தில் பாலாஜிக்கு அரவக்குறிச்சி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அரசுக்கு எதிராக வாக்களித்த விவகாரத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் செந்தில் பாலாஜியும் ஒருவர் ஆவர்.அதேபோல் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் செந்தில்பாலாஜி, அக்கழகத்தின் அமைப்பு செயலாளராக பதவி வகித்தார்.பின்னர் திமுகவில் இணைந்தார்.
இதன் பின் கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளராக செந்தில் பாலாஜி நியமனம் செய்யப்பட்டார்.அந்த சமயத்தில் அவர் கூறுகையில்,அரவக்குறிச்சியில் திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு தரப்பட்டால் போட்டியிடுவேன்.அதுவும் மு.க.ஸ்டாலின் விரும்பினால் அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவேன் என்று கூறினார்.
அதேபோல் தமிழகத்தில் 18 தொகுதிகளுடன் சேர்த்து மீதமுள்ள நான்கு தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.இந்த 4 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல், ஏப்ரல் 22ம் தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டது.அதன்படி அமமுகவில் இருந்து விலகி பின்னர் திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜிக்கு அரவக்குறிச்சி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா : அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இந்திய நேரப்படி நேற்று மாலை தொடங்கி இன்று அதிகாலை நிறைவடைந்தது.…
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் இந்திய நேரப்படி இன்று காலை 6 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி…
சென்னை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் நவ-24 மற்றும் 25-ம் தேதிகளில் சவுதியில் நடைபெற இருக்கிறது என…
சென்னை : தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று…
சென்னை : ஏற்றமும், இறக்கமுமாக உள்ள தங்கம் விலை, இன்று சற்று உயர்ந்துள்ளது. தீபாவளி பாண்டியை முன்னிட்டு அதிர்ச்சியின் உச்சத்திற்கு…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தல் இந்திய நேரப்படி நேற்று (நவம்பர் 5) மாலை தொடங்கி, இன்று அதிகாலை 6.30…