மயக்க நிலையில் செந்தில் பாலாஜி! 5 மணிநேரமாக நீடித்த இதய அறுவை சிகிச்சை நிறைவு!

Kauvery Hospital report

செந்தில் பாலாஜிக்கு காவேரி மருத்துவமனையில் இன்று அதிகாலை தொடங்கிய இருதய அறுவை சிகிச்சை நிறைவு.

சென்னை காவேரி மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சுமார் 5 மணி நேரமாக நடந்து வந்த இருதய அறுவை சிகிச்சை நிறைவு பெற்றது. காவேரி மருத்துவமனையில் இன்று அதிகாலை 5.15 மணியளவில் தொடங்கிய இருதய அறுவை சிகிச்சை (பைபாஸ் சர்ஜரி) நிறைவடைந்தது. இருதய அறுவை சிகிச்சையை நிபுணர் ரகுமான் தலைமையிலான மருத்துவக்குழு, செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.

அறுவை சிகிச்சை நிறைவு பெற்ற பின் தற்போது செந்தில் பாலாஜி வார்டுக்கு மாற்றப்பட்டார். செந்தில் பாலாஜி தற்போது வெண்டிலேட்டர் உதவியுடன் மயக்க நிலையில் இருப்பதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அடுத்த சில நாட்கள் தீவிர சிகிச்சை கண்காணிப்பில் செந்தில் பாலாஜி இருப்பார் எனவும் தகவல் கூறப்படுகிறது.

இதயத்திற்கு செல்லும் 3 முக்கிய ரத்தக்குழாய்களில் அடைப்பு உள்ளதாக ஏற்கனவே மருத்துவக்குழு அறிக்கை வெளியிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, இருதய அறுவை சிகிச்சை செய்துகொண்டபின் 90 நாட்கள் ஓய்வு தேவை என்று இதயநோய் சிகிச்சை நிபுணர் கூறியுள்ளார். முழுமையான இயல்புவாழ்க்கைக்கு திரும்ப 3 மாதங்கள் ஆகும். பைபாஸ் சர்ஜரி செய்துகொண்டபின் வாழ்நாள் முழுவதும் மருந்து சாப்பிட வேண்டியிருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்