பண மோசடி வழக்கில் இருந்து செந்தில் பாலாஜியை விடுவிக்க மறுப்பு.!
கடந்த 2011-2016 அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது பலரிடம் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.2.80 கோடி வரை பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால், செந்தில்பாலாஜி மோசடி செய்ததாக கூறி சென்னையில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம்புகார் அளித்தனர்.
அந்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கரூரில் உள்ள செந்தில்பாலாஜி வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தினர். அப்போது ,ஏராளமான ஆவணங்களை கைப்பற்றப்பட்டது. இதையடுத்து, செந்தில்பாலாஜி உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றார். ஆனால், விசாரணைக்கு தடைவிதிக்க முடியாது,விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று கூறியது.
இந்த வழக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. பின்னர், எம்பி மற்றும் எம்எல்ஏக்களின் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்த மோசடி வழக்கில் இருந்து தன்னை விடுவிக்குமாறு செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பண மோசடி வழக்கில் இருந்து செந்தில் பாலாஜியை விடுவிக்க சிறப்பு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.