சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவ்வழக்கு தொடர்பான விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி குற்றப்பத்திரிக்கை மற்றும் ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இதன்பின், செந்தில் பாலாஜியின் தொடர்ந்த ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் மற்றொரு ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு விசாரணையில் உள்ளது. இதனால், தொடர்ந்து நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு சிறையில் இருந்து வருகிறார் செந்தில் பாலாஜி. சமீபத்தில் அவரது அமைச்சர் பதவியும் செந்தில் பாலாஜி ராஜினாமா செய்திருந்தார்.
இதனிடையே, போக்குவரத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விசாரணை முடியு வரை, சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை தாக்கல் செய்த வழக்கின் விசாரணையை தள்ளிவைக்கக்கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
எடப்பாடி பழனிசாமி அந்தர் பல்டி – ஓபிஎஸ் கடும் விமர்சனம்!
இதற்கு அமலாக்கத்துறை பதில் மனுவும் தாக்கல் செய்திருந்தது. அதில், வழக்கின் விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கில் செந்தில் பாலாஜி இதுபோன்ற மனு தாக்கல் செய்துள்ளார். அவரது மனு சட்டத்தை தவறாக பயன்படுத்துவதைப் போன்றது. இதனால் விசாரணையை தள்ளி வைக்க கோர முடியாது என்றும் அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் அமலாக்கத்துறை வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில், முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அப்போது, செந்தில் பாலாஜி தொடர்ந்த மறு ஆய்வு மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், உயர்நீதிமன்ற நீதிபதிகள் ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வு அதற்கு மறுப்பு தெரிவித்தது. அதாவது, அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு தெரிவித்தனர். இதனிடையே, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் புதன்கிழமை விசாரணை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…