கரூர் மாவட்ட ஆட்சியரை மிரட்டியதாக எழுந்த புகார் தொடர்பான வழக்கில் செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது.
திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் உத்தரவாத மனுதாக்கல் செய்ய வேண்டும் என்று நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்ட ஆட்சியரை மிரட்டியதாக எழுந்த புகார் தொடர்பான வழக்கில் செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது.
கரூர் சிபிஐடி அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என செந்தில் பாலாஜிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், அடையாறு புற்றுநோய் நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் வழங்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் நிபந்தனை வைத்துள்ளது. சமீபத்தில், கரூர் மாவட்ட ஆட்சியர் வெளியில் நடமாட முடியாது என பகிரங்கமாக திமுக எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி மிரட்டினார். பின்னர், கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து, திமுக மாவட்ட பொறுப்பாளரும், அரவக்குறிச்சி திமுக எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜி மீது கொலை மிரட்டல் விடுத்தல், அரசு பணியை செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து ,போலீசார் விசாரித்து வந்த நிலையில், திடீர் மாற்றமாக கரூர் ஆட்சியரை மிரட்டிய புகார் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்த வழக்கில் செந்தில் பாலாஜி உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரியிருந்த நிலையில், தற்போது வழங்கப்பட்டுள்ளது.
சண்டிகர் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் முதல் குவாலிஃபயர் போட்டி இன்று மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சண்டிகர் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் முதல் குவாலிஃபயர் போட்டி இன்று மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
கர்நாடகா : கமல்ஹாசன் நடித்துள்ள தக்லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 1-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக…
நோர்வேயில் : நார்வே செஸ் போட்டியில் இந்தியாவின் உலக சாம்பியன் டி. குகேஷ் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்து…
மக்கா : விமானத்தைத் தவறவிட்ட நபரை மீண்டும் விமானமே அழைத்து சென்ற அதிசிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. லிபியாவைச் சேர்ந்த அமீர்…
சென்னை : பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் ஏற்கனவே பேசுபொருளாக இருந்த நிலையில், அதனை இன்னும் பெரிய அளவில்…