முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து , அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 8 மாதங்களாக சிறையில் உள்ளார். செந்தில் பாலாஜி ஜாமீன் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் தொடரப்பட்ட வழக்கு விசாரணை முடியும் வரை அமலாக்கத்துறை வழக்கு விசாரணையை தள்ளி வைக்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் செந்தில் பாலாஜி மனுவை தள்ளுபடி செய்தது.
முதன்மை நீதிமன்ற அமர்வு உத்தரவு எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பின்னர் கடந்த 16-ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்வதற்காக ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அப்போது அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை நீதிமன்றத்தில் ஒரு புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனால் கடந்த 16-ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு ஒத்திவைக்கப்பட்டது. செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்த புதிய மனுவில் தன்னை விடுவிக்க கோரிய மனு மீது உத்தரவு பிறப்பிக்கும் வரை குற்றச்சாட்டு பதிவுகளை தள்ளி வைக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு இன்று நீதிபதி அல்லி முன் விசாரணைக்கு வர உள்ளது. செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் இன்று நிறைவடைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…