செந்தில் பாலாஜி விலகியதால் அமமுக கூடாரம் காலியானதாக அர்த்தம் இல்லை என்று அமமுக துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவில் அதிரடி மாற்றங்கள் ஏற்றப்பட்டது. இதையடுத்து, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த செந்தில்பாலாஜி, அக்கழகத்தின் அமைப்பு செயலாளராக அறிவிக்கப்பட்டார். மேலும், அரசுக்கு எதிராக வாக்களித்த விவகாரத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் செந்தில் பாலாஜியும் ஒருவர் ஆவர்.
இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு தனது ஆதரவாளர்களுடன் சென்று சால்வை அணிவித்தார்.
இதன் பின்னர் செந்தில் பாலாஜி கூறுகையில்,தளபதி அவர்களை சிறந்த தலைவராக பார்க்கிறேன்.அம்மா அவர்களின் இறப்பிற்கு பின்னர் மற்றொரு இயக்கத்தில் இணைந்து இருந்தேன். தளபதி அவர்களின் ஈர்ப்பால் நான் திமுகவில் இணைத்துள்ளேன் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் இதன் பின்னர் அமமுக துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் செந்தில் பாலாஜி சென்றது தொடர்பாக கூறுகையில்,அவர் போனதில் வருத்தம் இல்லை .யாரையும் பிடித்து வைக்க முடியாது. செந்தில் பாலாஜி எங்கிருந்தாலும் வாழ்க.2006ல் இருந்து செந்தில் பாலாஜியை எனக்கு தெரியும்.எங்கள் உறவு நன்றாகத்தான் இருந்தது. 4 மாதம் முன் வரை நன்றாக பேசினார்.திடீர் என்று சொந்த பிரச்சனை, சில நாள் ”ஆக்ட்டீவாக” இருக்க மாட்டேன் என்றார். நான் சரி என்று கூறி அனுப்பி வைத்தேன். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அவர் எங்களிடம் பேசுவதை குறைத்துக் கொண்டார். கஜா புயலில் போது நிவாரணம் அனுப்பி வைத்தார்.ஜெயலலிதா நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை .இப்போது திமுகவிற்கு சென்றுவிட்டார்.அதேபோல் சிலர் வெளியே செல்வதால் எங்கள் இயக்கம் ஒன்றும் சிதைந்துவிடாது. அமமுக ஒன்றும் மதிமுக, தேமுதிக போல ஆகிவிடாது.செந்தில் பாலாஜி விலகியதால் அமமுக கூடாரம் காலியானதாக அர்த்தம் இல்லை
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…
இந்தியாவில் நடைபெறும் மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…
தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…
சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…