திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜி…!செந்தில் பாலாஜி எங்கிருந்தாலும் வாழ்க…!தினகரன் வாழ்த்து

Default Image

செந்தில் பாலாஜி விலகியதால் அமமுக கூடாரம் காலியானதாக அர்த்தம் இல்லை என்று அமமுக துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவில் அதிரடி மாற்றங்கள் ஏற்றப்பட்டது. இதையடுத்து, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த செந்தில்பாலாஜி, அக்கழகத்தின் அமைப்பு செயலாளராக அறிவிக்கப்பட்டார். மேலும், அரசுக்கு எதிராக வாக்களித்த விவகாரத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் செந்தில் பாலாஜியும் ஒருவர் ஆவர்.
இன்று  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு தனது ஆதரவாளர்களுடன் சென்று சால்வை அணிவித்தார்.
Image result for செந்தில் பாலாஜி
இதன் பின்னர் செந்தில் பாலாஜி கூறுகையில்,தளபதி அவர்களை சிறந்த தலைவராக பார்க்கிறேன்.அம்மா அவர்களின் இறப்பிற்கு பின்னர் மற்றொரு இயக்கத்தில் இணைந்து இருந்தேன். தளபதி அவர்களின் ஈர்ப்பால் நான் திமுகவில் இணைத்துள்ளேன் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் இதன் பின்னர் அமமுக துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் செந்தில் பாலாஜி  சென்றது தொடர்பாக  கூறுகையில்,அவர் போனதில் வருத்தம் இல்லை .யாரையும் பிடித்து வைக்க முடியாது. செந்தில் பாலாஜி எங்கிருந்தாலும் வாழ்க.2006ல் இருந்து செந்தில் பாலாஜியை எனக்கு தெரியும்.எங்கள் உறவு நன்றாகத்தான் இருந்தது. 4 மாதம் முன் வரை நன்றாக பேசினார்.திடீர் என்று சொந்த பிரச்சனை, சில நாள் ”ஆக்ட்டீவாக” இருக்க மாட்டேன் என்றார். நான் சரி என்று கூறி அனுப்பி வைத்தேன். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அவர் எங்களிடம் பேசுவதை குறைத்துக் கொண்டார். கஜா புயலில் போது நிவாரணம் அனுப்பி வைத்தார்.ஜெயலலிதா நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை .இப்போது திமுகவிற்கு சென்றுவிட்டார்.அதேபோல் சிலர் வெளியே செல்வதால் எங்கள் இயக்கம் ஒன்றும் சிதைந்துவிடாது. அமமுக ஒன்றும் மதிமுக, தேமுதிக போல ஆகிவிடாது.செந்தில் பாலாஜி விலகியதால் அமமுக கூடாரம் காலியானதாக அர்த்தம் இல்லை
 
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்