எந்த சட்டப் பிரிவின் கீழ் செந்தில் பாலாஜி தகுதி இழப்பு ஆகிறார்? – ஐகோர்ட் கேள்வி!
செந்தில் பாலாஜி அமைச்சர் பதிவில் நீடிப்பதற்கு எதிரான வழக்குகளை ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.
சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டத்தில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் நீடிப்பதை எதிர்த்து அதிமுகவின் ஜெயவர்தன் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இவ்வழக்கு விசாரணையின்போது, இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவாக தண்டனை பெற்றவர் பதவியில் நீடிக்கலாம் எனும் போது, எந்த சட்டப் பிரிவின் கீழ் செந்தில் பாலாஜி தகுதி இழப்பு ஆகிறார்? என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.
ஒரு வாரத்துக்கு மேல் காவலில் உள்ள ஒருவர் எப்படி அமைச்சராக தொடர முடியும் என்றும் செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்க தகுதியில்லை என அறிவிக்க நீதிமன்றத்துக்கு அதிகாரமுள்ளது எனவும் மனுதாரர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, செந்தில் பாலாஜி அமைச்சர் பதிவில் நீடிப்பதற்கு எதிரான வழக்குகளை ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம். இதுதொடர்பாக தமிழக அரசு தங்களது வாதங்களை முன்வைப்பதற்காக அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்.