மூன்றாவது நாளாக செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை விசாரணை!

Senthil balaji case hc

சென்னையில் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உச்சநீதிமன்றம் அனுமதியை தொடர்ந்து, புழல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜியை 5 நாள் காவலில் எடுத்து அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

சென்னை நுங்கப்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்து சென்று செந்தில் பாலாஜியிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 9 மணி நேரம் மட்டுமே விசாரணை நடத்த அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது.

இதனிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 2 மணி நேரத்துக்கு ஒருமுறை ரத்த அழுத்த பரிசோதனை செய்யப்படுகிறது என்றும் விசாரணை அறைக்கு வெளியே மருத்துவர்கள் இருப்பதாவும் கூறப்பட்டது. இந்த நிலையில், செந்தில் பாலாஜியிடம் 3வது நாளாக இன்று அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

செந்தில் பாலாஜிக்கு மருத்துவ பரிசோதனை செய்து ஓய்வு அளிக்கப்பட்ட பிறகு அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவியின் வங்கி கணக்குகளின் ஆவணங்களை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்