செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை தொடங்கியது.
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கதுறை சட்டவிரோத காவலில் வைத்திருப்பதாக, அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது. உயர்நீதிமன்றத்தை நாட அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், விசாரணை நடைபெறுகிறது
அப்போது, செந்தில் பாலாஜி தொடர்பான ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததுதான், அடிப்படை உரிமை பாதிக்கப்பட்டதால் நீதிமன்றத்தை நாடியுள்ளோம் என செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் என்ஆர் இளங்கோ வாதம் வைத்தார். கைது குறித்த தகவலும், கைதுக்கான காரணங்களையும் தெரிவிப்பது அடிப்படை உரிமை எனவும் செந்தில் பாலாஜி மனைவி தரப்பில் வாதம் வைக்கப்பட்டுள்ளது.
சட்டத்தால் உருவாக்கப்பட்ட நடைமுறைகளை உரிய முறையில் பின்பற்ற வேண்டும் என்று நக்கீரன் கோபால் வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி வழக்கறிஞர் என்ஆர் இளங்கோ வாதம் வைத்து வருகிறார். காரணத்தை கூறலாம் யாரையும் கைது செய்யக்கூடாது என்பதற்காகவே அரசியல் சாசன சட்டத்தின் 15 ஏ பிரிவை அம்பேத்கர் சேர்த்திருக்கிறார்.
செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றும் உயர்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி இடைக்கால உத்தரவாக கருத கூடாது என்றும் செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலுக்கு அனுப்பியதே தவறு எனவும் வாதம் முன்வைக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, மருத்துவமனையில் உள்ள நாட்களை காவலில் உள்ள நாட்களாக எடுத்துக்கொள்ள கூடாது என்று அமலாக்கத்துறை தாணு மனு தாக்கல் செய்துள்ளது
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…
இந்தியாவில் நடைபெறும் மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…
தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…
சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…