செந்தில் பாலாஜிக்கு கைது ஆவணங்களை அமலாக்கத்துறை வழங்கிய போது ஏன் பெறவில்லை என நீதிபதி கேள்வி.!
செந்தில் பாலாஜியின் கைது ஆவணங்களை அமலாக்கத்துறை வழங்கியபோது ஏன் வாங்கவில்லை என நீதிபதி கேள்வி.
அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கதுறையால் கைது செய்யப்பட்டு, தற்போது காவேரி மருத்துவமனையில் நீதிமன்ற காவலில் சிகிச்சை பெற்று வருகிறார். அமலாக்கத்துறை சட்டவிரோமாக கைது செய்தது எனக்கூறி, செந்தில் பாலாஜி மனைவி மேகலா மேகலா உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்து இருந்தார்.
இந்த மனுமீதான விசாரணை இரு நீதிபதி அமர்வு முன் விசாரிக்கப்பட்டு, இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கிய நிலையில், மூன்றாவது நீதிபதி கார்த்திகேயன் அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டு விசாரணை தொடங்கி நடைபெற்ற போது, இரு தரப்பு வாதங்களும் முன்வைக்கப்பட்டன.
இதில் கைது செய்வதற்கான ஆவணங்களை அமலாக்கத்துறை வழங்கியபோது செந்தில் பாலாஜி ஏன் பெற்றுக்கொள்ளவில்லை. அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டிருந்தால், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்கு பதிந்து தண்டனை பெற்றுக்கொடுக்காமல், கைதுக்கான ஆவணங்களையும் பெறவில்லை என நீதிபதி கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும் இந்த வழக்கை மூன்றாவது நீதிபதி கார்த்திகேயன் நாளை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.