செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் முறையீடு!
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடைகோரி உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு.
செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து அமலாக்கத்துறை முறையீடு செய்துள்ளது. அதாவது செந்தில் பாலாஜி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது.
அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேல்முறையீட்டு மனு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தை நாடவும் அறிவுறுத்தியுள்ளது. இருப்பினும், செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு மனு மீது ஜூன் 21-ல் விசாரணை நடைபெறும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைதான செந்தில் பாலாஜி சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.