செந்தில் பாலாஜி வழக்கு – தொடர்ந்து விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்குகளை தொடர்ந்து விசாரிக்க உத்தரவு.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு விசாரணையை தொடர்ந்து நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது, போக்குவரத்து துறையில் அரசு வேலை வாங்கி தருவதாக பணம் பெற்றுக் கொண்டு அமைச்சர் செந்தில் பாலாஜி முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த புகார் தொடர்பாக, மீண்டும் விசாரணையை தொடர்ந்து நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி, தேவைப்பட்டால் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து, மத்திய குற்றப்பிரிவு தொடர்ந்து விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில், புகார்களை விசாரித்து 2 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் ஆணையிட்டுள்ளது. 2011-2015 அதிமுக ஆட்சியில், அரசு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி மீது புகார் எழுந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.