அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான வழக்கில் திடீர் திருப்பம்.! தங்களையும் சேர்த்துக்கொள்ள அமலாக்கத்துரை விருப்பம்.!

Default Image

வேலை வாங்கி தருவதாக பணமோசடி வழக்கில் சிக்கியுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு விசாரணையில் தங்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என அமலாக்கத்துறை உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளது.  

கடந்த 2011 – 2015 வரையில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் தற்போதைய திமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி.

இவர் அதிமுகவில் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் போக்குவரத்துறையில் வேலை வாங்கி தருவதாக பணம் வாங்கி ஏமாற்றிவிட்டார் என அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகார் மீதான விசாரணைக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இதனை அடுத்து, செந்தில் பாலாஜி மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் இந்த தடையை நீக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி இந்த வழக்கை விசாரிக்க போலீசாருக்கு அனுமதி தரவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த கோரிக்கையை அடுத்து, அமலாக்கத்துறையினர் இந்த வழக்கு விசாரணையில் தங்களையும் இணைத்துகொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தது. இதற்கு செந்தில் பாலாஜி தரப்பு எதிர்ப்பு தெரிவித்தனர்.

தற்போது, தடை விதிக்க கோரி மனு அளித்துள்ள பாதிக்கபட்டவர் இந்த வழக்கு குறித்து பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதின்றம் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்