Senthil balaji july 12 [Image-IndiaToday
சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இதன்பின், காவலில் எடுத்து செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அவருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றங்கள் மறுப்பு தெரிவித்து வருகிறது.
செந்தில் பாலாஜி 13 முறை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்ட நிலையில் 14-வது முறையாக ஜாமீன் கோரிய வழக்கு நேற்று முன்தினம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வந்தது. அப்போது, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை வரும் 11-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இதனால், 14-வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது. ஜாமீன் கிடைக்காமல் செந்தில் பாலாஜி புழல் சிறையில் உள்ளார்.
இதற்கு இடையில் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவி நீட்டிப்பதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம்.எல் ரவி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் எந்த உத்தரவு பிறப்பிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கூறி செந்தில் பாலாஜி அமைச்சரவை நீடிப்பது குறித்து முதல்வர் தான் முடிவு செய்ய முடியும் எனக்கு கூறி வழக்கை முடித்து வைத்தது.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம்.எல் ரவி மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் இன்று…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் (ஏப்ரல் 23) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி மும்பை இந்தியன்ஸ் (MI) அணிக்கு…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
டெல்லி : ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…