செந்தில் பாலாஜி வழக்கில் இன்று மாலை நீதிமன்றம் உத்தரவு!
செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்குமாறு அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு மீது இன்று தீர்ப்பு.
சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்குமாறு அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு மற்றும் செந்தில் பாலாஜிக்கு இடைக்கால ஜாமீன் வழங்ககோரிய மனு மீது இன்று மாலை 4 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட உள்ளது. இந்த மனுக்கள் மீது செந்தில் பாலாஜி தரப்பு மற்றும் அமலாக்கத்துறை தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், வழக்கில் இன்று சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி மாலை 4 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கிறார்.
செந்தில் பாலாஜியை 15 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று, அமலாக்கத்துறை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்திருந்தது. இந்த மனு நீதிபதி அல்லி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மருத்துவமனையில் இருந்து காணொலி வாயிலாக அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் இருதரப்பு வாதங்களும் நடைபெற்ற நிலையில், இரு மனுக்கள் மீதான தீர்ப்பு இன்று ஒத்திவைக்கப்பட்டது.