செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கு… நாளை ஒத்திவைப்பு; 3-வது நீதிபதி கார்த்திகேயன்.!
அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கு, விசாரணையை மூன்றாவது நீதிபதி நாளைக்கு ஒத்திவைத்து உத்தரவு.
அமலாக்கத்துறையினரால் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்து அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு இருப்பதை எதிர்த்து அவரது மனைவி மேகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். அவர் செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யபட்டுள்ளதாக அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு மீதான வாதங்கள் முடிந்து, நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி என இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கிய நிலையில், மூன்றாவது நீதிபதிக்கு இந்த வழக்கு விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டதன் பேரில், நீதிபதி கார்த்திகேயன் இந்த வழக்கின் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து கூறிய நீதிபதி கார்த்திகேயன், ஏற்கனவே பட்டியலிடப்பட்ட வழக்குகளின் விசாரணையும் கருத்தில் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ள அவர், உச்சநீதிமன்றம் இந்த வழக்கை விரைவாக விசாரித்து முடிக்கவேண்டும் என கூறியதையும் குறிப்பிட்டுள்ளார்.