செந்தில் பாலாஜி சகோதரர் விரைவில் சரண்டர் – வழக்கறிஞர் தகவல்!

ashok kumar

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் கேரள மாநிலம் கொச்சியில் ஒரு சில தினங்களுக்கு முன் அமலாத்துறையால் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. செந்தில் பாலாஜி தொடர்புடைய வழக்கில் அவரது சகோதரர் அசோக்குமார் வீடு உள்ளிட்ட சோதனையில் ஈடுபட்ட அமலாக்கத்துறை, அவருக்கு 4 முறை சம்மன் அனுப்பியும், விசாரணைக்கு ஆஜராகாததால் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் கைது செய்யப்படவில்லை என்றும் அவர் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவல்கள் தவறானவை எனவும் அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டிருந்தது. கைதை மறுத்துள்ள அமலாக்கத்துறை 4 முறை சம்மன் அனுப்பட்டதாகவும், ஆனால் அவர் ஆஜராகவில்லை எனவும் விளக்கமளித்துள்ளது. ஜூன் 16 முதல் ஜூலை 16 வரை அசோக்குமாருக்கு 4 முறை சம்மன்கள் அனுப்பப்பட்டதாக கூறியிருந்தது.

இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் விரைவில் சரண்டராவார் என அவர் தரப்பு வழக்கறிஞர் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. எந்த வழக்கிற்காக சோதனை நடந்தது என்பதை தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையை பார்த்தபின் சரண்டராவார் எனவும் கூறியுள்ளார். அமலாக்கத்துறை 4 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத நிலையில், அசோக்குமாருக்கு வழங்கப்பட கேடு நிறைவு பெற்றதாகவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் அசோக் குமாரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்திய பிறகே செந்தில் பாலாஜிக்கு பிணை கிடைக்கும் சூழல் இருக்கிறது. இந்த நிலையில், குற்றப்பத்திரிகை கிடைத்த உடனே செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் விரைவில் சரணடைவார் என அவர் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்