செந்தில் பாலாஜி ஜாமீன் மனு – அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

Published by
பாலா கலியமூர்த்தி

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 2023 ஜூன் 14-ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதன்பிறகு, அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 நாட்கள் விசாரணை மேற்கொண்டனர். அமலாக்கத்துறை காவல் முடிந்த நிலையில், இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, அதன்நகலும் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்களை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றமும், சென்னை உயர்நீதிமன்றமும் தள்ளுபடி செய்த நிலையில், சென்னை புழல் சிறையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்து 17வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு சிறையில் உள்ளார்.

ஸ்பெயின் நிறுவனங்கள் தமிழ்நாட்டை நோக்கி வர வேண்டும்- முதலமைச்சர் உரை..!

இந்த சூழலில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி 2-வது முறையாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு அந்த மனு இன்று விசாரணைக்கு வருவதாக கூறப்பட்டது. இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி இரண்டாவது முறையாக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு வந்தது.

அப்போது, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு தொடர்பாக அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை பிப்.14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே, நீதிபதி கூறியதாவது, கடைநிலை அரசு ஊழியர் கைதானால் 48 மணிநேரத்தில் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்.

ஆனால், இதேபோல் கைது செய்யப்பட்டவர் 230 நாட்களாக அமைச்சராக நீடிக்கிறார். எனவே, 230 நாட்களுக்கும் மேல் சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி இன்னும் பதவியில் நீடிப்பதன் மூலம் என்ன கருத்தை சமூகத்துக்கு சொல்ல நினைக்கிறீர்கள் என கேள்வி எழுப்பிய நீதிபதி, சட்டம் அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

Recent Posts

உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி? நாளை மறுநாள் முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கு மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக முன்னதாக தெரிவித்திருந்தனர். இதனால்,…

52 mins ago

அடுக்கப்பட்ட குற்றச்சாட்டு! அதானி குழுமம் உடனான 2 திட்டங்களை ரத்து செய்தது கென்யா!

நைரோபி : அமெரிக்க முன்வைத்த குற்றச்சாட்டால் அதானி நிறுவனப் பங்குகள், நேற்று பங்குச்சந்தையில் கடும் சரிவைக் கண்டது. இதன் விளைவாக…

2 hours ago

எனக்கும் முதலமைச்சர் கனவு உண்டு! திருமாவளவன் பளீச் பேச்சு!

திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…

13 hours ago

விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ்! உடல்நிலை எப்படி இருக்கிறது? என்ன உணவு உட்கொள்கிறார்?

நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…

13 hours ago

இஸ்ரேல் பிரதமருக்கும், ஹமாஸ் தலைவருக்கும் எதிராக கைது வாரண்ட்!

கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…

14 hours ago

கேரளா ஸ்பெஷல் சம்மந்தி செய்வது எப்படி? செய்முறை ரகசியங்கள் இதோ..!

சென்னை :கேரளா ஸ்டைலில் காரசாரமான நாவூறும்  சுவையில் சம்மந்தி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான…

15 hours ago