செந்தில் பாலாஜி ஜாமீன்… அமலாக்கத்துறைக்கு அதிரடி உத்தரவு..!

Published by
murugan

கடந்த ஜூன் 14-ஆம் தேதி சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. அதன் பிறகு அவர் பொறுப்பு வகித்து வந்த மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் மின்சாரத்துறை ஆகிய துறைகள் மற்ற அமைச்சர்களுக்கு ஒதுக்கி கொடுக்கப்பட்டு இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என தமிழக அரசு அறிவித்தது.

இதற்கிடையில், கைது செய்யப்பட்டத்திலிருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி  நீதிமன்ற காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.  ஏற்கனவே சென்னை முதன்மை நீதிமன்றத்தில் 2-முறை ஜாமீன் மனு தாக்கல் செய்து இருந்தார். செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் உயர்நீதிமன்றமும் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தது.

பின்னர், அமலாக்கத்துறை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் உச்சநீதிமன்றம் நீதிபதிகள் மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் வழங்கமுடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்து கீழமை நீதிமன்றத்தில் ஜாமீன் பெற மனுதாக்கல் செய்ய அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்புக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், இன்று 3-வது முறையாக ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது இருதரப்பினரும், பதில் அளிக்கவும், வாதங்களை முன் வைக்கவும் கால அவகாசம் வேண்டும் என தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, செந்தில் பாலாஜி  ஜாமீன் மனு குறித்து அமலாக்கத்துறை பதில் தர சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மேலும் வழக்கு விசாரணையை வரும் ஜனவரி 8-ஆம் தேதிக்கு நீதிபதி அல்லி ஒத்திவைத்தார்.

Recent Posts

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்… ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை  ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…

3 hours ago

தவறான செய்தி கொண்ட வீடியோக்களுக்கு முற்றுப்புள்ளி… கிரியேட்டர்களுக்கு செக் வைத்த யூடியூப்.!

டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…

3 hours ago

தனியா வந்தாலும் சரி, மொத்தமா வந்தாலும் சரி… “2026ல் திமுக கூட்டணிக்குதான் வெற்றி” – மு.க.ஸ்டாலின்!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…

5 hours ago

தை அமாவாசை 2025 இல் எப்போது?.

தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…

6 hours ago

பாப்கார்ன்களுக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்!

ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று  நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…

8 hours ago

நிதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு – டிஜிபி உத்தரவு!

சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…

9 hours ago