சேற்றில் தான் செந்தாமரை மலரும்! அதுபோல அந்த குடும்பத்தில் கூட நல்ல மனிதன் பிறந்துள்ளார்! – ஹெச்.ராஜா
மு.க.அழகிரி நல்லவர். 20-ம் தேதி நடைபெறும் கூட்டத்தில், அவர் நல்ல முடிவை எடுப்பார் என நினைக்கிறேன்.
மு.க.அழகிரி தனிக்கட்சி தொடங்க போவதாக செய்திகள் வெளியான நிலையில், வரும் 20-ம் தேதி மு.க.அழகிரி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. இதனையடுத்து, அழகிரி பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தடையை மீறி பாஜக சார்பில் வேல் யாத்திரை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஹெச்.ராஜா, ‘மு.க.அழகிரி நல்லவர். 20-ம் தேதி நடைபெறும் கூட்டத்தில், அவர் நல்ல முடிவை எடுப்பார் என நினைக்கிறேன் என்றும், சேற்றில் தான் செந்தாமரை மலரும், அதுபோல அந்த குடும்பத்தில் கூட நல்ல மனிதன் பிறந்துள்ளார்.’ என மு.க.அழகிரியை புகழ்ந்து பேசியுள்ளார்.