எங்கள் மீது வீசப்படும் சேற்றை எடுத்து வைத்தாவது செந்தாமரை மலரும்…! தமிழக பாஜக தலைவர் தமிழிசை
எங்கள் மீது வீசப்படும் சேற்றை எடுத்து வைத்தாவது செந்தாமரை மலரும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில், மேகதாது அணை கட்டுவதில் தமிழக பாரதிய ஜனதாவுக்கு ஒப்புதல் இல்லை .மேகதாது பற்றி பாஜகவுக்கு கவலை இல்லை என ஸ்டாலின் கூறி வருகிறார். பல கட்சிகள் இதை அரசியலாக்க முயற்சிப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.புல் பூண்டு முளைக்காத இடத்தில் தாமரை எப்படி மலரும் என பேசுகிறார்கள். எங்கள் மீது வீசப்படும் சேற்றை எடுத்து வைத்தாவது செந்தாமரை மலரும் என்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.