பரபரப்பு : மதுரை விமான நிலையத்தில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீச்சு..!
பழனிவேல் தியாகராஜனின் காரை வழிமறித்து, காரின் மேல் செருப்பு வீச்சு.
ஜம்மு காஷ்மீர், ரஜோரி அருகே 25 கி.மீ தொலைவில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில், 3 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
இந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்த லட்சுமணன் என்ற ராணுவ வீரர் ஆவர்.24 வயதான இவர் மதுரை மாவட்டம் T.புதுப்பட்டியை சேர்ந்தவர்.இவரது இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மதுரை விமான நிலையம் வந்தடைந்த லட்சுமணன் உடலுக்கு ராணுவ வீர்ரகள் மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து ராணுவ வீரருக்கு அஞ்சலி செலுத்த வந்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அரசின் சார்பில் மரியாதை செலுத்திய பின், பாஜக சார்பில் மரியாதை செலுத்துமாறு அறிவுறுத்தினார்.
இதனால், ஆத்திரமடைந்த பாஜகவை சேர்ந்த சிலர் அஞ்சலி செலுத்திவிட்டு சென்ற அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் காரை வழிமறித்து, காரின் மேல் செருப்பை தூக்கி எறிந்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.