பரபரப்பு : நாமக்கல்லில் ஆட்சியர் அலுவலகத்தில் தீ விபத்து..!
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தோட்டக்கலை தொழில்நுட்ப ஆதார் மைய அலுவலகத்தில் திடீரென தீ விபத்து.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூடுதல் கட்டிடத்தில் செயல்படும், மாவட்ட தோட்டக்கலை தொழில்நுட்ப ஆதார் மைய அலுவலகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில், முக்கிய ஆவணங்கள், கணினிகள் எரிந்து சேதம் அடைந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து தீயணைப்புத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.