பரபரப்பு : கோவையில் ஆளுநரின் உருவ பொம்மை..!
கோவையில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் உருவபொம்மை எரிக்கப்பட்டதால் பரபரப்பு.
சட்டப்பேரவையில் நேற்று ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் நடந்து கொண்ட விதம் குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர். மேலும், ஆளுநரை எதிர்த்து கல்லூரி மாணவர்களும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழ்நாட்டை தமிழகம் என அழைக்க வேண்டும் என்று கூறியதற்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் சார்பில் கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது ஆளுநர் ஆர்.என்.ரவியின் உருவபொம்மை எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.