பரபரப்பு.. பாஜகவினரால் எடப்பாடி பழனிசாமியின் படம் எரிப்பு!
எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை பாஜக இளைஞரணியினர் திரளாக திரண்டு எரித்ததால் பரபரப்பு.
அடுத்தடுத்து நிர்வாகிகள்:
பாஜகவில் இருந்து அடுத்தடுத்து நிர்வாகிகளில் அதிமுகவில் இணைந்து வரும் நிலையில், மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினர் அதிமுகவையும், எடப்பாடி பழனிசாமியையும் விமர்சித்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த நிர்மல் குமார், திலிப் கண்ணன் உள்ளிட்டோர் அண்ணாமையை கடுமையாக விமர்சித்து பதிவிட்டிருந்தனர்.
அதிமுக – பாஜக இடையே மோதல்:
பாஜகவில் இருந்து விலகியவர்களை அதிமுகவில் சேர்த்துக்கொண்டதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதுபோன்று அதிமுக – பாஜக இடையே மாறி விமர்சித்து, கண்டனம் தெரிவித்து கடும் வார்த்தை மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், இரு கட்சிகளிடையே இன் வரும் தேர்தல்களில் கூட்டணி நீடிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஒருபக்கம், பாஜகவியில் இருந்து அதிமுக திட்டமிட்டே நிர்வாகிகளை இழுக்கிறது என குற்றச்சாட்டப்பட்ட நிலையில், அதிமுகவால் தான் பலருக்கு உதவி, எங்களுக்கு யார் தயவும் தேவையில்லை என அதிமுகவினர் கூறி வருகின்றனர்.
உருவப்படம் எரிப்பு:
இந்த பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், கோவில்பட்டியில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை பாஜக இளைஞரணியினர் திரளாக திரண்டு எரித்ததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளை அதிமுகவில் இணைத்ததற்கு எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை எரித்து, போராட்டம் நடத்தி உள்ளனர்.
அதிமுக கண்டனம்:
இனாம்மணியாச்சி பேருந்து நிறுத்தம் அருகே பாஜக இளைஞரணியினர் எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை எரித்துள்ளனர். ‘எடப்பாடி ஒரு துரோகி’ எனவும் போஸ்டர் ஒட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை பாஜகவினர் எரித்ததற்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. பாஜகவுக்கு எதிரான போராட்டங்களை நாங்களும் நடத்த நேரிடும், அதிமுகவை பாஜக மிரட்டி பார்க்க முடியாது என அதிமுக ஐடி அணி செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் கூறியுள்ளார்.