மூத்த அமைச்சர்கள் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வதுடன் சந்திப்பு

மூத்த அமைச்சர்கள் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள அதிமுகவில் தற்போதே முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.இதன் வெளிப்பாடாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தனித்தனியாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் நாளை அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில் அதிமுகவின் மூத்த அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோர் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் , துணை முதலமைச்சருமான பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் முதலமைச்சர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் செங்கோட்டையன், உடுமலை ராதாகிருஷ்ணன் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஐபிஎல்லை விட்டு விலகிய ருதுராஜ்! கேப்டனாக களமிறங்கும் தோனி!
April 10, 2025
கோவை தனியார் பள்ளி விவகாரம் – பள்ளியின் முதல்வர் சஸ்பெண்ட்!
April 10, 2025