சுதந்திர போராட்ட தியாகியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான சங்கரய்யா (வயது 102) உடல்நல குறைவால் காலமானார். உடல்நல குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த சங்கரய்யா சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலமானார்.
சங்கரய்யா மறைவை தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். பொது மக்களின் அஞ்சலிக்காக சென்னையில் சங்கரய்யாவின் உடல் வைக்கப்பட உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆத்தூரில் 1921 ஜூலை 15ல் பிறந்த சங்கரய்யா, தனது இளமைக்காலம் முதல் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்.
அதாவது, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்து கொண்டிருந்தபோதே சுதந்திர போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டதால் 4 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர். கல்லூரி படிப்பை முடிக்கும் தருவாயில் சங்கரய்யா சிறையில் அடைக்கப்பட்டார். 18 மாதங்கள் சிறையில் இருந்து மீண்டும் வெளியே வந்தவர் மாணவர்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபட்டார்.
அடுத்த 6 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் – வானிலை ஆய்வு மையம்
மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டதால் 4 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். அதாவது, பாளையங்கோட்டையில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு 4 ஆண்டு காலம் சிறையில் இருந்தவர். மேலும், 1964ல் கருத்து வேறுபாட்டால் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாக உடைந்தபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கிய தலைவர்களில் சங்கரய்யா ஒருவர் ஆவார்.
ஜனசக்தி நாளிதழில் முதல் பொறுப்பாசிரியராக இருந்தவர். அதேபோல், மார்க்சிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான தீக்கதிரின் முதல் ஆசிரியர் சங்கரய்யா. தீண்டாமை ஒழிப்பு, சாதி மறுப்பு திருமணங்கள் மற்றும் தொழிலாளர் உரிமைக்காக பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்தவர் ஆவார்.
இதனிடையே, சுதந்திர போராட்ட வீரர் சங்கரய்யாவுக்கு முதல் தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு வழங்கி கவுரவித்திருந்தது. தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக 3 முறை பதவி வகித்துள்ளார். வாழ்நாள் முழுவதும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு 95 வயதிலும் ஆவணக் கொலைகளுக்கு எதிராக போராடிய சங்கரய்யாவின் உயிர் இன்று பிரிந்தது. இவரது மறைவையொட்டி கம்யூனிஸ்ட் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை : குட் நைட் என்ற அருமையான படத்தை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்த மணிகண்டன் அடுத்ததாக மீண்டும் அதைப்போல ஒரு…
சென்னை :மணப்பட்டி சிக்கன் சுக்கா அசத்தலான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சிக்கன்- ஒரு கிலோ…
சென்னை : கடந்த ஜனவரி 16ஆம் தேதியன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச புத்தக காட்சித் திருவிழா நடைபெற்றது. …
டெல்லி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான மார்ச் 9ஆம்…
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…