மூத்த குடிமக்கள் நலச்சட்டம்… உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்.!
மூத்த குடிமக்கள் பாதுகாப்பு நலச்சட்டம் தமிழ்நாட்டில் அமலில் உள்ளதாக தமிழக அரசு, உயர்நீதிமன்றத்தில் விளக்கம்.
தமிழகத்தில் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பாதுகாப்புக்காக, மூத்த குடிமக்கள் நலச்சட்டத்தை அமல்படுத்தக்கோரி கடந்த 2017 ஆம் ஆண்டு குமார் என்பவர் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்த விசாரணையில் தமிழக அரசு சார்பில், பெற்றோர்கள் மூத்த குடிமக்கள் நலச்சட்டம் தமிழகத்தில் செயல்பாட்டில் தான் உள்ளது, மேலும் டிஜிபி அனைத்து காவல்துறைக்கும் தங்கள் பகுதியில் உள்ள மூத்த குடிமக்களை கணக்கு எடுத்து அவர்களின் தகவல்களை சேகரித்து வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் மூத்த குடிமக்களின் புகார்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவற்றை தீர்த்து வைக்கவும் அனைத்து காவல்துறையினருக்கும், டிஜிபி சுற்றறிக்கை மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, இதனால் தமிழகத்தில் மூத்த குடிமக்கள் பாதுகாப்பு நலச்சட்டம் செயலில் இருப்பதாக கூறிய தமிழக அரசின் விளக்கத்தை ஏற்று தலைமை நீதிபதி அமர்வு வழக்கை முடித்துவைத்துள்ளது.