வாக்களிக்க செல்ல இயலாதோர் கவனத்திற்கு… தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு.!

Senior Citizen in Vote

Election2024 : மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் இன்று வாக்களிக்க பொது போக்குவரத்தை இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய மக்களவைத் தேர்தல் இன்று காலை 7 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 39 தொகுதிகளிலும், புதுச்சேரி தொகுதியிலும் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காலை முதல் காத்திருந்து தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் பல்வேறு வகையில் வாக்காளர்களுக்கான வசதிகளை ஏற்படுத்தி வருகிறது. பல்வேறு விழிப்புணர்வு செயல்களிலும் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வந்தது.

தற்போது இந்திய தேர்தல் ஆணையம் நேற்று புதிய அறிவிப்பை அறிவித்து இருந்தது. அதன்படி மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் உடைக்க பலவீனமானவர்கள் இன்று உள்ளூர் பொது போக்குவரத்தை இலவசமாக பயன்படுத்திக் கொள்ள எதுவாக உள்ளூர் பேருந்தில் அவர்களுக்கு இலவச பயண சீட்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒருவேளை பேருந்து வசதி அவர்கள் வசிக்கும் இடத்தில் இல்லை என்றாலும், வாக்குச்சாவடிக்கு இலவசமாக அழைத்துச் செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு சக்ஷாம் (Saksham-ECI) எனும் செயலி மூலமும் அல்லது தேர்தல் ஆணையத்தின் 1950 எனும் மாவட்ட தேர்தல் அலுவலக உதவி எண் மூலமாகவோ இந்த வசதிகளை பெற்றுக்கொள்ளலாம் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

இந்த வசதியை மாற்று திறனாளி வாக்காளர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழக தேர்தல் ஆணைய தலைமை அதிகாரி அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்