அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உயர் சிகிச்சை அளிக்க எய்ம்ஸ் மருத்துவர்கள் வர வேண்டும்.! எச்.ராஜா கோரிக்கை.!
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை அளிக்க எய்ம்ஸ் மருத்துவர்கள் வரவழைக்கப்பட வேண்டும் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கூறியுள்ளார்.
அமலாக்கத்துறையினர் சோதனைக்கு பிறகு இன்று அதிகாலை தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவர் தற்போது நெஞ்சுவலி காரணமாக, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த கைது நடவடிக்கை குறித்தும், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கொடுக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்தும் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சபட்ச சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். அவருக்கு சிகிச்சை அளிக்க எய்ம்ஸ் மருத்துவ குழு சென்னை வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.