கோரிக்கை வைத்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்.. உறுதியளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

செங்கோட்டையன் கோரிக்கையை ஏற்று தேங்காய் விவசாயிகளுக்கு விரைவில் பணப்பட்டுவாடா செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

sengottaiyan and mk stalin

சென்னை : ஊரக வளர்ச்சி துறை சார்பில் மாநில அளவிலான வளர்ச்சி மற்றும் ஒருங்கிணைப்பு கண்காணிப்பு குழு எனும் திஷா (DISHA) கமிட்டி செயல்பட்டு வரும் நிலையில், இதில் அனைத்து கட்சி சார்பிலும் எம்பிக்கள், எல்எல்ஏ பிரமுகர்கள் உறுப்பினர்களாக இருப்பார்கள். இந்த கமிட்டியின் தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்.

இக்குழு ஆலோசனை கூட்டம் இன்று தலைமை செயலகத்தில்  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த மாவட்ட அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு (DISHA) குழு கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், தேங்காய் விவசாயிகளுக்கான நிவாரணம் வழங்க கோரிக்கை வைத்தார். இதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

கூட்டத்தில், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் வளர்ச்சி திட்டங்கள், அவற்றின் முன்னேற்றம் மற்றும் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவற்றை சமாளிக்கும் முறைகள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.

அப்போது கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், தேங்காய் விவசாயிகள் சந்திக்கும் பிரச்சினைகளை முன்வைத்து, அவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். உடனடியாக, முதலமைச்சர் ஸ்டாலின், இந்த கோரிக்கையை ஏற்று, தேங்காய் விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இது குறித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் “செங்கோட்டையன் வைத்த கோரிக்கையை ஏற்று, தேங்காய் விவசாயிகளுக்கு விரைவில் பணப்பட்டுவாடா செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதியளித்து பேசினார். மேலும், ஏற்கனவே அதிமுகவில் செங்கோட்டையன் பேச்சுக்கள், செயல்கள் அரசியல் களத்தில் பேசுபொருளாகி வரும் சூழலில் முதலமைச்சர் தலைமையிலான கூட்டத்தில்  செங்கோட்டையன் பங்கேற்றது மேலும் பேசுபொருளாக மாறியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்