செங்கோட்டையனை பாஜக பயன்படுத்துகிறதா? செல்லூர் ராஜு கொடுத்த பதில் இதோ…
செங்கோட்டையனை பாஜக பயன்படுத்துகிறதா என்ற கேள்விக்கு ஆயிரம் பேர் ஆயிரம் சொல்லுவாங்க., நாங்க ஒற்றுமையாக தான் இருக்கிறோம் என செல்லூர் ராஜு பதில் அளித்துள்ளார்.

மதுரை : சமீப நாட்களாகவே அதிமுக உட்கட்சி விவகாரம் பொதுவெளியில் விவாதிக்கப்படும் அளவுக்கு அக்கட்சியினரின் செயல்பாடுகள் அனைவராலும் உற்றுநோக்கப்படுகிறது. முதலில் கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம், அடுத்து பாஜக மாநில நிர்வாகிகளின் டெல்லி பயணம், அடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் பயணம் என அதிமுக அரசியல் களம் பரபரக்கிறது.
அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ், சசிகலா, தினகரனை சேர்க்க இபிஎஸ் தயங்குகிறார். அதனால் தற்போது அதிமுக தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் செங்கோட்டையன் மூலமாக அதிமுகவை ஒருங்கிணைத்து, பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம் என்ற அரசியல் காய் நகர்தலில் பாஜக தேசிய தலைமை ஈடுப்பட்டு வருகிறது என பல கூற்றுகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் உலாவுகின்றன.
இப்படியான சூழலில், அதிமுக பிளவுபடவில்லை. நாங்கள் ஒன்றாக தான் இருக்கிறோம் என அதிமுக மூத்த நிர்வாகிகள் தொடர்ந்து கூறி வருகின்றனர். அப்படி தான் செல்லூர் ராஜுவும் இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார். அவரிடம், செங்கோட்டையனை பாஜக பயன்படுத்துகிறதா என்ற கேள்விக்கு, அரசியல் விமர்சகர்கள் ஆயிரம் சொல்லுவாங்க, அதெல்லாம் நடக்குமா? இன்னும் தேர்தலுக்கு ஒரு வருஷம் இருக்கு, இன்னும் எங்க கட்சி பற்றியே எல்லோரும் பேசுறீங்களே, என பதில் அளித்தார்.
அவர் மேலும் பேசுகையில், நாங்க பிரியவில்லை. நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாக தான் இருக்கிறோம். தற்போது கூட மதுரை மாவட்ட நிர்வாகிகள் அத்தனை பெரும் ஒன்றாக தான் இங்கு இருக்கிறோம். கட்சியில் ஒன்னு ரெண்டு பேர் போறது எப்போதும் வழக்கமாக நடப்பது தான். ஒரு தலைவர் போறார்னா அவர் பின்னாடி நாலு பேர் இருப்பாங்க போயிருப்பாங்க என செங்கோட்டையன் பற்றிய கேள்விக்கு பதில் அளித்தார் செல்லூர் ராஜு.
அடுத்து, சிவோட்டர்ஸ் கருத்து கணிப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலிடம் பிடித்தது பற்றியும், 2ஆம் இடத்தில் விஜய், 3ஆம் இடத்தில் எடப்பாடி பழனிச்சாமி இருப்பது பற்றியும் கேள்வி எழுப்பப்பட்டது. அதுபற்றி அவர் கூறுகையில், கருத்து கணிப்பில் அப்படித்தான் சொல்லுவாங்க. முதலில் அதிகமாக போட்டால் கண்டுபிடித்து விடுவார்கள் என கொஞ்சம் கம்மியா போடுவாங்க.தேர்தல் நேரத்தில் இந்த கருத்து கணிப்பு எல்லாம் தூள் தூளாகி விடும். மக்கள் தான் எஜமானர்கள். கள நிலவரம் பாருங்க.” எனக் கூறினார் செல்லூர் ராஜு.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025