நம்பிக்கை இல்லா தீர்மானம் : ஒன்றிணைந்த அதிமுக! விலகி நிற்கும் செங்கோட்டையன்! 

இன்றும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை.

ADMK Chief secretary Edappadi Palanisamy

சென்னை : கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (மார்ச் 14) அன்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. அன்றைய தினமே மாநில பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அடுத்து மார்ச் 15ஆம் தேதியன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

இரு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து இன்று முதல் பட்ஜெட் மீதான விவாதம் நடத்த சட்டப்பேரவை கூட உள்ளது. இந்த சட்டப்பேரவை நிகழ்வுகளில் சபாநாயகர் அப்பாவு ஒருதலைப்பட்சமாக ஆளும் கட்சிக்கு (திமுக) ஆதரவாக செயல்பட்டு வருகிறார். எதிர்க்கட்சிகளுக்கு போதிய நேரம் அளிப்பதில்லை உள்ளிட்ட பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்து சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர அதிமுக முடிவு செய்துள்ளது.

இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக ஆலோசிக்க இன்று சட்டபேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வழக்கம் போல இபிஎஸ் தலைமையிலான இந்த ஆலோசனை கூட்டத்திலும் அதிமுக முன்னாள் அமைச்சரும் அதிமுக மூத்த தலைவருமான செங்கோட்டையன் கலந்து கொள்ளவில்லை.

இதற்கு முன்னதாகவே கடந்த வார பட்ஜெட் கூட்டத்தொடரின் போது இபிஎஸ் தலைமையிலான ஆலோசனை கூட்டத்திலும் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. இது குறித்த கேள்வியை எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டதற்கு, அவருக்கு தனிப்பட்ட காரணங்கள் இருக்கும். ஏன் வரவில்லை என்பதை அவரிடம் தான் கேட்கவேண்டும் என இபிஎஸ் கூறினார். இந்த அதிருப்தி குறித்த கேள்விக்கு பதில் கூற செங்கோட்டையன் மறுத்துவிட்டார்.

தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆலோசனை கூட்டத்தை மறுக்கும் செங்கோட்டையனின் போக்கு அரசியல் களத்தில் பல்வேறு யூகங்களை எழுப்பியுள்ளது. இந்த யூகங்களுக்கு உரிய பதிலை செங்கோட்டையனும், இபிஎஸும் தான் வெளிப்படையாக கூற வேண்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்