ஏரிக்கு அருகே உள்ள ‘சின்ன’ குளத்தை விற்பனைக்காக மனைகளாக பிரித்த நில உரிமையாளர்கள்!
- செங்கல்பட்டு மாவட்டத்தில் பல ஏக்கர் விவசாய நிலங்கள், நீர் தேங்கும் நிலங்கள் விற்கப்பட்டு வருகின்றன
- அப்படி விற்கப்பட்ட நிலத்தில் தான் தற்போது நீர் தேங்கி குளம் போல் காட்சியளிகிறது.
சென்னைக்கு மிக அருகில், 24 மணிநேரமும் பஸ் வசதி, தண்ணீர் வசதி, பார்க், ஸ்கூல் என நில உரிமையாளர்களும், இடை தரகர்களும் பொதுமக்களிடம் ஏதேதோ சொல்லி நிலத்தை விற்றுவிடுகிறார்கள்.
அப்படி விற்கப்படும் நிலங்கள் சிலவை மழை காலங்களில் நீர் தேங்கும் நிலங்களாக இருக்கின்றன. ஆனால் அது தெரியாமல் வாங்கிவிட்டு பின்னர் மழை காலங்களில் தண்ணீர் தேங்குவதால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
சென்னையை அடுத்து உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் பொன்விளைந்த களத்தூர் செல்லும் வழியில் உள்ளது இந்த ஒழத்தூர். அப்பகுதியில் உள்ள ஏரிக்கு அருகே உள்ள காலி மனை வீட்டு மனைகளாக பிரிக்கப்பட்டு இருந்தது. தற்போது பெய்த கன மழையில் அந்த காலி மனைகளில் நீர் நிறம்பி காணப்படுகின்றன. இந்த பகுதி சின்ன குளம் போல காட்சியளிக்கிறது.