ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு அனுப்புவதா? – சிபிஎம்
தமிழக அரசிடம் கேட்காமல் ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுப்பியது கண்டனத்துக்குரியது என சிபிஎம் தெரிவித்துள்ளது.
தமிழக அரசிடம் கலந்தாலோசிக்காமல் ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு அனுப்புவது கண்டனத்துக்குரியது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. தமிழக முதல்வர் கூடுதலாக கோரியுள்ள ஆக்சிஜனை உடனே மத்திய அரசு வழங்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
மேலும், தேசிய கல்விக்கொள்கையை தமிழ் மொழியில் வெளியிடாதது, தமிழ் மக்களை புறக்கணிக்கும் செயலாகும் என்றும் குறிப்பிட்டுள்ளது.