என்னையும், எனது குழந்தைகளையும் எனது கணவரிடம் வழியனுப்பி வையுங்கள்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பகுதியில் உள்ள நெசவாளர் தெருவை சேர்ந்தவர் ரஞ்சித்குமார்(39). இவரது மனைவி ராசி. இவர்களுக்கு அக்சயா, அனியா என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பதாக ரஞ்சித்குமார் உடல்நலக்குறைவால் காலமானார்.
இதனையடுத்து, ரஞ்சித்குமாரின் பெற்றோருடன் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் வசித்து வந்துள்ளனர். ரஞ்சித்குமாரின் தந்தை ராமதாஸ் (72) கூலிவேலை செய்து குடும்பத்தை கவனித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக மசோர்வுடன் காணப்பட்ட ராசி, தனது வாட்சப் ஸ்டேட்டஸில், ‘கணவனை பிரிந்து வாழ இயலவில்லை’ என பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், நேற்று இரவு குழந்தைகளுக்கு தூக்க மாத்திரை கொடுத்து கொலை செய்துவிட்டு, அவரும் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். காலையில் நீண்ட நேரமாகியும் கதவுகள் திறக்கப்படாததால், சந்தேகமடைந்த ரஞ்சித்குமாரின் பெற்றோர் அக்கம் பக்கத்தினரின் உதவியுடன், கதவை உடைத்து பார்த்துள்ளனர்.
அப்போது மூன்று பேரும் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில், போலீசார் ராசி எழுதிய கடிதம் ஒன்றை கைப்பற்றியுள்ளனர்.
அந்த கடிதத்தில், ‘என்னை மன்னித்துவிடுங்கள். நான் ஒருவருடம் கழித்து தான் இந்த முடிவை எடுத்துள்ளேன். என்னையும், எனது குழந்தைகளையும் எனது கணவரிடம் வழியனுப்பி வையுங்கள்.’ என எழுதியுள்ளார். இரண்டு மகள்களுடன், தாயும் சேர்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : நேற்று தலைநகர் சென்னையில் காலை 6 மணி முதல் 7 மணிக்குள் சுமார் 7,8 இடங்களில் நடந்த…
சென்னை : தமிழக அரசியலில் மிக பரபரப்பான காட்சிகள் அரங்கேறி வருகின்றன. சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று கொண்டிருக்கும் வேளையிலேயே அவசரமாக…
அகமதாபாத் : ஐபிஎல் 2025 இன் ஐந்தாவது போட்டி இன்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : தென்னிந்தியத் திரைப்பட நடிகரும் இயக்குநர் பாரதிராஜாவின் மகனுமாகிய நடிகர் மனோஜ் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அண்மையில், அவர்க்கு…
அகமதாபாத் : ஐபிஎல் 2025 இன் ஐந்தாவது போட்டி இன்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் (48) மாரடைப்பால் காலமானார். அன்மையில் அவர்க்கு இதய அறுவை செய்யப்பட்டு இருந்தது.…