செம்மொழி பூங்கா : மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை செம்மொழிப் பூங்காவில் மலர் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

ChennaiFlowerShow

சென்னை: தமிழக தோட்டக்கலைத் துறை சார்பில் சென்னையில் உள்ள செம்மொழி பூங்காவில் இன்று 4-வது மலர் கண்காட்சி நடைபெற உள்ளது. இதனைமுன்னிட்டு ஊட்டி தாவரவியல் பூங்கா போன்று மலர்களை வைத்து அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இந்த பூங்காவில் சுமார் 800 வகையான வித, விதமான செடிகள் வளர்க்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது. அது மட்டுமின்றி, இதில் அரிய வகை மரங்களும் உள்ளன.

செம்மொழி பூங்காவில் 30 லட்சம் மலர்கள் கொண்டு மலர் கண்காட்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க விருப்பதாகவும் முன்னதாக சொல்லப்பட்டது.  இந்த நிலையில், இன்று பூங்காவிற்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்த மலர்களை பார்வையிட்டு மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

மலர் கண்காட்சியில் யானை, மயில், பறவை, பட்டாம்பூச்சி, ஊட்டி மலை ரயில், படகு, கார், பொம்பைகள் போன்ற வடிவங்களில் குழந்தைகளைக் கவரும் வகையில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன அதனை புகைப்படங்களில் பார்க்கும்போதே கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது.

மேலும், இந்த மலர் கண்காட்சியை காண வரும் பெரியவர்களுக்கு கட்டணமாக ரூ.150 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதைப்போல, சிறியவர்களுக்கு ரூ.75 கட்டணமும், வீடியோ அல்லது புகைப்படங்கள் உள்ளே சென்று எடுக்க விரும்புபவர்களுக்கு ரூ.500 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மலர்க் கண்காட்சி நுழைவுச் சீட்டை mhorticulture.in என்ற இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்