#BigBreaking:”இவர்களுக்கு பிப்.1 முதல் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு” – அமைச்சர் பொன்முடி முக்கிய அறிவிப்பு!
சென்னை:தமிழகத்தில் அனைத்து தனியார் மற்றும் அரசு கல்லூரி மாணவர்களுக்கு பிப்.1 முதல் பிப்.20 வரை ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவிப்பு.
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக கல்லூரி மாணவர்களுக்கு ஜனவரி 31 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில்,கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் நடத்துவது தொடர்பாக மாணவர் பிரதிநிதிகளுடன் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்நிலையில்,தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு கல்லூரி மாணவர்களுக்கு வருகின்ற பிப்.1 முதல் பிப்.20 வரை ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என்று அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
மேலும்,ஜூன் அல்லது ஜூலையில் அப்போதைய சூழலை கருத்தில் கொண்டு கல்லூரி இறுதியாண்டு தேர்வு கண்டிப்பாக நேரடியாக சுழற்சி முறையில் நடத்தப்படும்.ஒவ்வொரு பல்கலைக்கழகத்தில் நடத்திய பாடங்களில் இருந்தே கேள்விகள் கேட்கப்படும் எனவும்,கிராமப்புற மாணவர்கள் அப்லோட் செய்த விடைத் தாள்கள் வந்து சேர்வது தாமதமானாலும் பெற்றுக்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
அதன்படிஅரசு,தனியார் கலை அறிவியல்,பொறியியல்,தொழில்நுட்பக் கல்லூரிகளின் தேர்வுகளை பல்கலைக்கழகங்கள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும்,ஆன்லைன் தேர்வு முறையில் தவறுகள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.