ஜனவரி 21 முதல் பொறியியல் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு – அண்ணா பல்கலைக்கழகம்!
பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு ஜனவரி 21 முதல் மார்ச் 2 வரை பல்வேறு கட்டங்களாக நடைபெறும் என அறிவிப்பு.
ஜனவரி 21-ஆம் தேதி முதல் பல்வேறு கட்டங்களாக பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வை அறிவித்துள்ளது அண்ணா பல்கலைக்கழகம். நவம்பர் – டிசம்பர் மாதம் நடைபெற இருந்த தேர்வுகள் ஜனவரி முதல் மார்ச் வரை நடைபெறும் என அறிவித்துள்ளது. அதன்படி, M.E., M.Tech., M.Arch., மாணவர்களுக்கும் ஜனவரி 21 முதல் பிப்ரவரி இறுதி வரை தேர்வு நடைபெற உள்ளது.
B.E., B.Arch., மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு ஜனவரி 21 முதல் மார்ச் 2 வரை பல்வேறு கட்டங்களாக நடைபெறும் என்றும் அரியர் மாணவர்களுக்கும் சிறப்பு வாய்ப்பாக நேரடி முறையில் செமஸ்டர் தேர்வு நடைபெற உள்ளது எனவும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.