செம ஹேப்பி நியூஸ்…தங்கம் விலை சரிந்தது…சவரனுக்கு ரூ.80 குறைந்தது.!
கடந்த 1 வாரமாக தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வந்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது. கடந்த 1 வாரத்தில் மட்டும் ரூ.3,000 ரூபாய் வரை அதிகரித்ததால் நகைப் பிரியர்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து இன்று சற்று தங்கம் விலை குறைந்துள்ளது.
தங்கம் விலை
இன்று (21.03.2023) சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்துரூ.44,560 ஆகவும், கிராமுக்கு ரூ.10 குறைந்து 5,570 ரூபாய் எனவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் 24 காரட் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ. 48,536க்கும் கிராம் ஒன்றுக்கு ரூ.10 குறைந்து ரூ. 6,067-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை
சென்னையில் வெள்ளியின் விலை, வெள்ளி விலை கிராமுக்கு 70 பைசா உயர்ந்து ரூ.74.70-க்கும் கிலோ வெள்ளி விலை 700 ரூபாய் அதிகரித்து 74,700 ரூபாயாக
விற்பனையாகி வருகிறது.