மதுரையில் பிரபல கேஸ் ஏஜென்சியில் முகவராக வேலை செய்து வந்துள்ளார் செல்வராஜ். இவர் கேஸ் ஏஜென்சி வரும் வாடிக்கையாளர்களிடம் தான் ஒரு தீபாவளி சீட்டு நடத்துவதாகவும், அதன்மூலம் நிறைய சலுகைகளை தருவதாகவும் கூறியுள்ளார். இதனை நம்பி பலர் அவரிடம் தீபாவளி சீட்டில் சேர்ந்துள்ளனர். இந்த தீபாவளி சீட்டில் பலர் சேர்ந்து உள்ளதாக தெரிகிறது. இதில் செல்வராஜின் உறவினர்கள் கூட பலர் சேர்ந்துள்ளனர்.
இதில் மதுரையில் ஒரு உணவு உணவகம் நடத்தி வரும் நட்ராஜ் என்பவரும் தனக்கு தெரிந்தவர்களிடம் கூறி செல்வராஜிடம் தீபாவளி சீட்டு சேர வைத்துள்ளார். இதனிடையே அக்டோபர் மாதம் செல்வராஜ் தனது போனை சுவிட்ச் ஆப் செய்து பணத்துடன் தலைமறைவாகி விட்டார்.
இதனையடுத்து வாடிக்கையாளர்கள் போலீசில் புகார் செய்தனர். மேலும் நடராஜ் கூறிய கூறியதால் சேர்ந்த வாடிக்கையாளர்கள் நடராஜனை தொந்தரவு செய்ய ஆரம்பித்துள்ளனர். அதனால் அவர் வேறு வழியின்றி தனது உணவகத்தை விற்று அதன்மூலம் பணத்தை வாடிக்கையாளர்களுக்கு செட்டில் செய்துள்ளார்.
உணவு உணவகத்தை விற்றுவிட்டதால் ஒரு தள்ளுவண்டி கடை நடத்தி வந்துள்ளார். அந்த தள்ளுவண்டி கடையில் தலைமறைவான செல்வராஜ் இரவு உணவு வாங்குவதற்காக அண்மையில் வந்துள்ளார். செல்வராஜை அடையாளம் கண்ட நடராஜனின் மனைவி உடனே செல்வராஜை தனது கணவர் உதவியுடன் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தற்போது செல்வராஜை கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…