செல்வமுருகன் மரணம் விவகாரத்தில், வீடியோ ஆதாரங்கள் வெளியிட்ட வேல்முருகன்.
விருத்தாசலம் சிறையில் அடைக்கப்பட்ட செல்வமுருகன் மீது பொய்வழக்கு போடப்பட்டதாக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், செல்வமுருகன் நெய்வேலி நகர போலீசாரால், கடந்த 30-ம் தேதி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் விருத்தாசலம் சிறையில் அடைக்கப்பட்ட போது, அங்கு அவருக்கு வெட்டு வந்ததாகவும், அதன் பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். ஆனால், அவர் சிறையில் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டினர்.
இந்நிலையில், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், செல்வமுருகன் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. அவர் வழிப்பறி திருடனல்ல, வளர்ந்து வரும் கிராம தொழிலதிபர். செல்வமுருகன் மீது திட்டமிட்டு திருட்டு வழக்கு பதிவு செய்தது கண்டிக்கத்தக்கது. செல்வமுருகன் விவகாரத்தில் ஆதாரங்கள் இருந்தும், தவறு இழைத்த போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க எடப்பாடி மறுக்கிறார் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வேல்முருகன், செல்வமுருகன் வழிப்பறி திருடனல்ல என்று நிரூபிக்கும் வகையில், வீடியோ ஆதாரங்களை வெளியிட்டுள்ளார். வியாபாரி செல்வமுருகன் மரணம் தொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினர் ஏற்கனவே விசாரணை மேற்கொண்டு வருகிற நிலையில், வேல்முருகன் வெளியிட்ட வீடியோ ஆதாரங்களை கைப்பற்றி, மேற்கொண்டு விசாரணை நடத்தப்படும் என சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…