Sellur Raju [File Image]
மதுரை: மதவாதத்தை முன்னிறுத்தும் பாஜக என்றுமே தமிழகத்தில் வளராது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
மக்களவை தேர்தலில் அதிமுக தமிழகத்தில் போட்டிட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியை தழுவியது. சில இடங்களில் மூன்றாம் மூன்றாம் இடம் பிடிக்கும் அளவுக்கு தோல்வி கண்டது. பாஜக சில இடங்களில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடம் பிடித்தது. இருந்தும், தமிழகத்தில் 39 தொகுதிகளும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது.
இந்த தேர்தல் தோல்வி குறித்தும், பாஜக குறித்தும் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பாஜக குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். அவர் கூறுகையில், அம்மாவின் (ஜெயலலிதா) கொள்கையை மீறி முன்னர் பாஜகவுடன் கூட்டணி வைத்ததற்கு நாங்கள் வருந்துகிறோம்.
மத்தியில் பாஜக ஆட்சி அமைத்து இருந்தாலும், அது ஓரு மதத்தை முன்னிறுத்தி அரசியல் செய்து வரும் கட்சி. எப்போதும் நாடாளுமன்ற தேர்தலில் இரண்டு பார்வை உண்டு. நாங்கள் மாநில உரிமை மீட்க கோரி மக்களிடம் வாக்கு சேகரித்தோம். அது மக்கள் மத்தியில் சரியாக சென்றடையவில்லை.மோடியை ஆதரித்தவர்கள் பாஜகவுக்கு வாக்களித்தனர். மோடியை எதிர்த்தவர்கள் திமுக கூட்டணிக்கு வாக்களித்தனர். அவ்வளவு தான்.
இந்தியாவை ஆளும் கட்சி என்றாலும் மதத்தை வைத்து ஆட்சி செய்யும் பாஜக ஓர் குட்டை தான். தமிழகத்தில் பயணம் செய்து ஒரு விதமாக பேசும் பிரதமர் மோடி ஒடிசாவில் தமிழர்களை இழிவுபடுத்தி பேசுகிறார். ஓட்டுக்காக தமிழனை (வி.கே.பாண்டியன்) விமர்சிக்கிறார். தமிழக மக்கள் மதவாத அரசியலை ஏற்க மாட்டார்கள். மதவாதத்தை தூக்கி நிறுத்தும் பாஜக என்றுமே தமிழகத்தில் வளராது என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறினார்.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. இதில்…
கொல்கத்தா : ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இன்று…
டெல்லி : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று அமெரிக்காவில் இறக்குமதியாகும் அயல்நாட்டு பொருட்கள் மீது அதிகப்படியான புதிய பரஸ்பர…
மதுரை : இன்று மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநாடு நடைபெற்று வருகிறது. வரும் ஏப்ரல் 6ஆம் தேதி…
சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…