மதுரை டாக்டர் எம்.ஜி.ஆர் விளையாட்டு அரங்கில் தமிழக அரசின் மாநில அளவிலான குடியரசு தின விளையாட்டு விழாவினை அமைச்சர் செல்லூர் ராஜூ குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்,துவக்கி வைத்த பின்னர் பேசிய அமைச்சர் தமிழகத்தில் 37 மாவட்டங்களை சேர்ந்த 8 ஆயிரம் மாணவர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். விளையாட்டுப் போட்டியை நடத்துவதற்கு என்று 13 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. பங்கு பெறும் மாணவர்கள் அனைவருக்கும் தேவையான ஏற்பாடுகள் எல்லாம் செய்யப்பட்டுள்ளது மாணவப்பருவக் காலங்களில் இத்தகைய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டால் தனிமனித ஒழுக்கம் ஆனது வளர்கிறது. ஒழுக்கத்திற்கு எடுத்துக்காட்டாக நானே இருக்கின்றேன் என்று கூறினார். மேலும் அவர் கூறுகையில் தமிழகத்தில் விளையாட்டுத் துறைக்கு மட்டுமே 168 கோடி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது. விளையாட்டுத்துறையில் தென்னிந்தியாவிலேயே தமிழகம் தான் முதலிடம் வகிப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…