ஹெலிகாப்டரில் சென்ற பெண்கள் செய்றவேலையா இது?குரங்கணி தீவிபத்து மீட்பு பணியில் நேர்ந்த அவலநிலை ….
ஹெலிகாப்டருடன் குரங்கணி தீ விபத்து மீட்பு பணிகளுக்காக , அங்கிருந்த ஆசிரியர் பயிற்சி பள்ளி மாணவிகள் செல்ஃபி எடுத்துக் கொண்ட விவகாரம் பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.
மலையேற்றப் பயிற்சியில் தேனி மாவட்டம் போடிநாயக்கனுர் அருகே உள்ள குரங்கணி வனப் பகுதியில் ஈடுபடச் சென்ற 36 பேர், ஞாயிற்றுக்கிழமை அங்கு ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கிக் கொண்டனர். இவர்களில் சென்னையைச் சேர்ந்த 5 பேர் உட்பட மொத்தம் 11 பேர் உயிரிழந்தனர்.
மீட்புப் பணிகளுக்காக இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று ஞாயிறு அன்று தேனிக்கு வரவழைக்கப்பட்டிருந்தது. இந்த விமானமானது போடிநாயக்கனுர் ஸ்பைசஸ் கல்விக் குழும பள்ளி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.
நிறுத்தப்பட்டிருந்த அந்த ஹெலிகாப்டர் அருகே அங்கு பயிலும் ஆசிரியர் பயிற்சி பள்ளி மாணவிகள் சென்றனர். ஏதோ உதவி செய்யப்போகிறார்கள் என்று எண்ணிய தருணத்தில் அவர்கள் ஒன்று கூடி செல்ஃபி எடுக்கத் துவங்கினர்.
தனியாகவும், குழுவாகவும் மற்றும் ஆசிரியர்களுடனும் என்றும் மாறி மாறி அவர்கள் புகைப்படம் எடுக்கக்க காட்டிய ஆர்வம் பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைத்தது.
இத்தகைய நடவடிக்கையானது எங்கு சென்று முடிவடை
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.