உ.பி மக்கள் தமிழகத்தில் சுயமரியாதையை கற்றுக்கொண்டனர்.! தயாநிதி பெருமிதம்.!
சென்னை: நடந்து முடிந்த மக்களவை தொகுதியில், பாஜகவால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட உத்திர பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் I.N.D.I.A கூட்டணி தான் அதிக இடங்களை கைப்பற்றியது. பாஜக 33 இடங்களை மட்டுமே வென்று இருந்தது. சமாஜ்வாடி 37 இடங்களையும், காங்கிரஸ் 6 இடங்களையும் வென்று இருந்தன.
இதுகுறித்து இன்று திமுக எம்.பி தயாநிதி மாறன் சென்னை வில்லிவாக்கத்தில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் விமர்சனம் செய்து பேசியிருந்தார். அவர் கூறுகையில், தமிழகத்தில் 40க்கு 40 என I.N.D.I.A கூட்டணி வெற்றி பெற்றிருப்பதற்கு ஒரே காரணம் காரணம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் என கூறினார்.
உத்திர பிரதேசத்தில் 80 தொகுதிகளில் பாஜக தான் வெல்லும் என பலர் கூறினார்கள். ஆனால் அங்கு பாதிக்கு மேலே I.N.D.I.A கூட்டணி தான் வென்று இருக்கிறது. இதுகுறித்து ஒரு மீம்ஸ் பார்த்தேன். அதில் , உத்திர பிரதேச மக்கள் தமிழகத்திற்கு வேலைக்கு செல்கிறார்கள். அங்கிருந்து சுயமரியாதையை கற்றுக்கொண்டு உபியில் மோடிக்கு எதிராக வாக்களித்துள்ளனர் என கூறப்பட்டிருந்தது என்று கூறினார் திமுக எம்பி தயாநிதி மாறன்.