தமிழகத்தில் குரூப் 2 குரூப் 2ஏ-இல் 5,529 காலிப்பணியிடங்களுக்கு 6.82 லட்சம் பெண்கள் உள்பட மொத்தம் 11.78 லட்சம் பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர்.இதனையடுது,கடந்த மே 21 ஆம் தேதி குரூப் 2, 2ஏ தேர்வு 4,012 தேர்வு மையங்களில் நடைபெற்ற நிலையில், இத்தேர்வுகளை சுமார் 84.44% பேர் மட்டுமே எழுதினர் என TNPSC தெரிவித்திருந்தது.
குரூப் 2, 2ஏ தேர்வு எழுத 11,78,163 பேர் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்த நிலையில், 9,94,878 பேர் ( 84.44% ) மட்டுமே தேர்வில் பங்கேற்றனர் என்றும் தேர்வுக்காக ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்தவர்களில் 1,83,285 பேர் தேர்வு எழுதவில்லை எனவும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தலைவர் பாலசந்திரன் முன்னதாக தகவல் தெரிவித்திருந்தார்.மேலும்,குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள், வருகின்ற ஜூன் மாதம் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில்,குரூப் 2, 2ஏ தேர்வுக்கான உத்தேச விடைகள் அதிகாரப்பூர்வமாக https://www.tnpsc.gov.in/ என்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் வெளியாகியுள்ளது. குறிப்பாக,உத்தேச விடைக்குறிப்பில் ஏதேனும் ஆட்சேபனைகள் இருப்பின்,வருகின்ற ஜூன் 3 ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள், இணையத்தின் வாயிலாக தெரிவிக்கலாம் என்று TNPSC நிர்வாகம் அறிவித்துள்ளது.
டெல் அவில் : இஸ்ரேல் ஹமாஸ் போரானது கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் தொடங்கி 15 மாதங்களை கடந்து…
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…