தமிழகத்தில் 5 நகரங்கள் தேர்வு! – மத்திய அரசு அறிவிப்பு
பாதுகாப்பு கட்டமைப்பு திட்டத்தை தொடங்க தமிழகத்தில் 5 நகரங்கள் தேர்வு என மத்திய அரசு அறிவிப்பு.
பாதுகாப்பு கட்டமைப்பு திட்டத்தை தொடங்க தமிழகத்தில் 5 நகரங்களை தேர்வு செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை, கோவை, ஓசூர், சேலம், திருச்சி ஆகிய நகரங்களில் பாதுகாப்பு தொழில் கட்டமைப்பு திட்டம் தொடங்க மத்திய அரசு தேர்வு செய்துள்ளது.
53 தொழில் நிறுவனங்கள் மூலம் ரூ.11,794 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.